Home உலக செய்திகள் பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் 153,479 பேர் பாதிப்பு – 1272 பேர் மரணம்!

பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் 153,479 பேர் பாதிப்பு – 1272 பேர் மரணம்!

58
0

உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய் பிரித்தானியாவையும் மிக மோசமாக தாக்கி வருகிறது.

கடந்த 7 நாட்களில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான (153479) மக்கள் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தகவல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல் மட்டுமே.

இதே வேளை கடந்த வாரத்தில் மட்டும் 1272 பேர் குறித்த நோயினால் மரணமடைந்தும் உள்ளனர்.

இதையடுத்து பிரித்தானியாவில் குறித்த நோயினால் இறந்தோர் எண்ணிக்கை 44,998 ஆக உயர்வடைந்துள்ளதோடு, நோத் தாக்கம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 894,690 பேர் ஆகவும் பதிவாகியுள்ளது.

குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாதாரணமாகவே நோய்களுக்கு உள்ளாகும் நிலை காணப்படும் பிரித்தானியாவில் தற்போதைய குறித்த நோய் பரவல் இலகுவில் மக்களை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கருதப்படுவதால் பெரும் அச்ச சூழலுக்குள் பிரித்தானியா வாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தல்களையும் பிரித்தானியா அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதிலும், நோ பரவலை தடுக்கவும், மக்களை குறித்த நோயில் இருந்து பாதுகாக்கவும் சரியான வழிமுறைகளை கையாளவில்லை எனவும், பொருளாதாரத்தை மட்டுமே இலக்கு வைத்து செயற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.