Home இலங்கை இலங்கையில் ஒரே நாளில் 541 பேருக்கு கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

இலங்கையில் ஒரே நாளில் 541 பேருக்கு கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

50
0

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 4 ஆயிரத்து 464 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 41 வயது நபரொருவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 19 மற்றும் 75 வயதுடைய நபர்கள் இருவரும் உள்ளடங்கலாக மூவர் இன்றையதினம் (27/10) குறித்த நோயினால் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கையில் இதுவரை கொரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் மற்றையவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலும் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.