Home செய்திகள் மாவை, விக்கி திடீர் சந்திப்பு!

மாவை, விக்கி திடீர் சந்திப்பு!

27
0

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து உரையாடியுள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

நல்லூரிலுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் வாஸஸ்தலத்தில் நேற்று (18/10) ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திப்பை மேற்கொண்ட மாவை சேனாதிராஜா சுமார் அரை மணி நேரம் பொதுவான அரசியல் விடயங்கள் தொடர்பாக உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் இவ்வாறு சந்தித்து, பேசியிருப்பது எதிர்வரும் காலத்தில் தமிழ் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.