Home செய்திகள் நிமலராஜனுக்கு யாழில் அஞ்சலி!

நிமலராஜனுக்கு யாழில் அஞ்சலி!

26
0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்ற, தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்திருந்தார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.