Home செய்திகள் இன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”

இன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”

105
0

சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கைகளில் இலங்கைத் தீவின் ஆட்சி தொடங்கிய நாள் முதலாய் இன்றுவரை அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் உரிமை குரலாய் பல சொல்லொனா துயர்களுக்கு மத்தியிலும் தம் கடமை உணர்ந்து உண்மைகளை வெளிக்கொணர்வதற்காய் பணியாற்றியதற்காய் படுகொலை செய்யப்பட்ட “ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கொள்ளும் தினம் இன்றாகும்.

இலங்கை தீவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கொள்ளவும், அதிலிருந்து எழுச்சி கொள்ளவுமென பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் சரவ்தேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நாளான “ஒக்டோபர் 19” ஆம் திகதியை “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்” ஆக கடந்த 2015 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தியிருந்தது.

நிமலராஜன் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர் என்ற வகையிலும், செய்தி சேகரிப்பின் போது கொல்லப்பட்டவர் என்பதனாலும் அவர் இறந்த நாளை பொதுவாக தமிழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொண்டு (ஒரு சிலரை தவிர) அன்று முதல் “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்” கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

வருடா வருடம் “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்” ஐ முன்னிட்டு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிகவுகளை நடாத்திவந்ததோடு, ஊடகவியலாளர்களையும் கெளரவித்து நினைவு பரிசில்களஇயும் வழங்கி வந்திருந்தது.

ஆனால் உலகளாவிய ரீதியில் தற்போதுள்ள கொரோனா நோய் பரவல் அச்ச சூழல் காரணமாக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான சட்ட திட்டங்களுக்கு அமைவாக இவ் ஆண்டு நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளில் ஊடகத் துறையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து அயராது பணியாற்றி உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததால் படுகொலை செய்யப்பட்ட அத்தனை தமிழ் ஊடகவியலாளர்களையும் எம் நெஞ்சில் நிறுத்தி தமிழ் நாதம் ஊடக குழுமம் சிரம் தாழ்த்தி அஞ்சலிகளை செலுத்திக்கொள்கிறது.

கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற ஊடகவியலாளர் படுகொலை நிகழ்வின் போது கலந்து கொண்டு உரையாற்றிய மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன்