Home உலக செய்திகள் பிரித்தானியாவில் 7 நாட்களில் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பு!

பிரித்தானியாவில் 7 நாட்களில் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பு!

11
0

பிரித்தானியாவில் கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா நோய்த்தாக்கம் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த 11ம் திகதி முதல் 17ம் (நேற்று வரை) திகதிவரையான காலப்பகுதியிலேயே 101,712 பேர் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 819 பேர் குறித்த நோயினால் சாவடைந்துள்ளதாகவும் பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இத்தரவுகள் வைத்தியசாலை பதிவுக்கு உட்பட்டவையே எனவும், பதிவிற்கு வராமல் வீடுகளிலும், தனியார் காப்பகங்களிலும் உள்ளவர்களின் எண்ணிக்கையோடு சேர்த்தால் மிக அதிகமாக இருக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதே வேளை பிரித்தானியாவில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ள இடமாக கண்டறியப்பட்ட வட இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் ZONE 1 கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு LOCKDOWN அமுல் படுத்தப்பட்டுள்ளது.