Home செய்திகள் கொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்!

கொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்!

16
0

கொழும்பிலுள்ள மக்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பேருந்து தரிப்பு நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2ஆவது அலை நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையிலேயே முதற்கட்டமாக இலங்கை தலைநகர் கொழும்பில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், இவ்வாறு ஏனைய மாவட்டங்களிலும் தேவைக்கேற்ப செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.