Home செய்திகள் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக க.கருணாகரன் கடமையினை பொறுப்பேற்றார்:

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக க.கருணாகரன் கடமையினை பொறுப்பேற்றார்:

22
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் மாவட்ட செயலகத்தில் தனது கடமையினைப் இன்று (17/10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் – இலங்கை நிருவாக சேவை விசேடதர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பதோடு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கட்டது.

கடமையினை பொறுப்பேற்ற பின் அரசாங்க அதிபராக அவர் பேசுகையில்;

சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.