
17-10-2020 இன்றையதினம் நியூசிலாந்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பிரதமரான ஜெசிந்தா அர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி 64 ஆசனங்களை பெற்று 40 வயதுடைய ஜெசிந்தா அர்டன் இரண்டாவது முறையாகவும் நியூசிலாந்தின் பிரதமராக (40வது பிரதமராக) பெற்றுள்ளார்.
இதேவேளை தேசிய கட்சி 35 ஆசனங்களையும், ஏ.சி.ரி நியூசிலாந்து 10 ஆசனங்களையும், பச்சை கட்சி 10 ஆசனங்களையும், மோரி கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
1980 யூலை 26ம் திகதி நியூசிலாந்தின் ஹமில்டன் நகரரில் பிறந்த ஜெசிந்தா அர்டன் நியூசிலாந்தின் University of Waikato இல் கல்வியை நிறைவு செய்து பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 இல் பிறந்த பெண் பிள்ளை ஒன்று (2 வயது) உள்ள இளம் குடும்பத்தலைவி நாட்டின் தலைவியாக (பிரதமராக) வெற்றிபெற்றிருபது குறிப்பிடத்தக்கது.