Home செய்திகள் ஓமந்தையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்பு!

ஓமந்தையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்பு!

11
0

வவுனியா – ஓமந்தை, மாணிக்கர் வளவுப் பகுதியின் வீடு ஒன்றில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு காணப்பட்ட இரண்டு ஆண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அங்கு மேலும் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இருந்த நிலையில், நோயாளர் காவுவண்டி மூலம் வவுனியா மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணிக்கர் வளவு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான 4 பிள்ளைகளின் தந்தையான, 40 வயதுடைய, கோபால் குகதாசன் மற்றும் கரிப்பட்டமுறிப்பை சேர்ந்த 34 வயதுடைய, சிவனு மகேந்திரன் ஆகியோரின் சடலங்களே வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில், சுப்பிரமணியம் சிவாகரன் என்ற என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்து வரும் இளைஞன் ஒருவரை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.