Home செய்திகள் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் ஆரம்பம் – அனந்தி வெளிநடப்பு!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் ஆரம்பம் – அனந்தி வெளிநடப்பு!

17
0

கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக அனைத்து தமிழ் கட்சிகளின் இன்றைய கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இன்று (17) காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன் உட்பட பல தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கு முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வருகையை அடுத்து ஈழத்­த­மிழர் சுயாட்சி கழ­கத்தின் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்­பி­ன­ரு­மான அனந்தி சசி­தரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்திருந்தார்.

இந்றைய கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தரவுள்ளார் என்ற தகவலை அடுத்தே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.