Home செய்திகள் தொடரும் மணி-கஜன் முறுகல்!

தொடரும் மணி-கஜன் முறுகல்!

6
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினமே யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்கக் கோரும் எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளப்பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட மயூரனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்குமாறும் கட்சி கோரியுள்ளது.