Home செய்திகள் புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களுக்கு ஒரு வருட தடை!

புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களுக்கு ஒரு வருட தடை!

8
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரையின் பிரகாரம், யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேருக்குக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்கமைய தண்டனைக்குரியவர்களுக்கான அறிவித்தல்கள் இன்று துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒருமாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருபது இங்கு குறிப்பிடத்தக்கது.