Home உலக செய்திகள் பிரித்தானியாவில் 24 மணித்தியாலங்களில் 20 ஆயிரம் பேர் கொரோனா நோயால் பாதிப்பு!

பிரித்தானியாவில் 24 மணித்தியாலங்களில் 20 ஆயிரம் பேர் கொரோனா நோயால் பாதிப்பு!

49
0

பிரித்தானியாவில் நேற்றைய தினம் மட்டும் கொரோனா நோய் தாக்கம் 19,724 பேருக்கு ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் அன்றாட நடவடிக்கைகள் யாவும் பிரித்தானியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் தொடர்ந்த வண்ணமே உள்ளதை காண முடிகிறது.

முகக் கவசம் அணிதல், இரண்டு மீற்றர் இடைவெளியை பேணுதல் போன்றன, பெரும்பாலான இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதிலும், PUB எனப்படும் மது அருந்தும் நிலையங்களில் மக்கள் அதிகளவிலும், கூட்டம் கூட்டமாகவும் காணப்படுகின்றமை தொடர்ந்தவண்ணமே உள்ளன.