Home செய்திகள் கொழும்பு – மாளிகாவத்தையில் இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்:

கொழும்பு – மாளிகாவத்தையில் இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்:

5
0

கொழும்பு – மாளிகாவத்தையில் ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டதன் பின், சட்டங்களை மீறி மாளிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள அரபு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கப்பட்டதாக தெரிய வந்ததை அடுத்தே குறித்த பாடசாலையில் கல்வி கற்ற 28 மாணவர்கள் மற்றும் கல்வி கற்பித்த இரண்டு ஆசிரியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், சமகால கட்டுப்பாடுகள், சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.