Home முக்கிய செய்திகள் கொரோனா நோயாளர்களுக்கென 24 வைத்திய சாலைகள் தயார் நிலையில்: சுகாதார அமைச்சு

கொரோனா நோயாளர்களுக்கென 24 வைத்திய சாலைகள் தயார் நிலையில்: சுகாதார அமைச்சு

17
0

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மேலதிகமாக 10 வைத்தியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 14 வைத்தியசாலைகளில் 2,400 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், தற்போதுள்ள சூழ் நிலையை கருத்தில் கொண்டு மேலதிகமாக 10 வைத்தியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா நோய் பரவலின் முதலாம் அலையின் போது மூன்று மாவட்டங்களில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாம் அலையின் போது 22 மாவட்டங்களில் நோய் தொற்று பரவியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 5170 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் அவர்களுள், 1800 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

88 முகாம்களில் 9703 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.