Home செய்திகள் 27 வயது குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

27 வயது குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

6
0

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இன்று (14/10) காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் குறித்த சம்பவம் தற்கொலை தானா அல்லது கொலையா என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை.

இதனை அடுத்து, இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை பார்வையிட்டதுடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணையில் …….

வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் தனது 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் தான் (கணவர்) தாயார் வீட்டிற்கு சென்றதாகவும், திரும்பி வந்து வீட்டுக்குள் சென்ற போது அங்கே தன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அவர் (கணவர்) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கஜனி (தன் மகள்) கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். என்பதும் குறிபிடத்தக்கது.