Home செய்திகள் உயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவனுக்கு கொரோனா!

உயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவனுக்கு கொரோனா!

5
0

உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் இரணவில வைத்தியசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கம்பஹா – திவுலபிடிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த மாணவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 8 மாண வர்களுக்கும் கொரோனா பரிசோதனையைச் செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.