Home செய்திகள் கரவெட்டியில் – உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்!

கரவெட்டியில் – உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்!

67
0

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி இயங்கிய இரண்டு தனியார் கல்வி நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அறிவித்தலைக் கருத்தில் கொள்ளாது கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கி வந்த இரண்டு தனியார் கல்வி நிலையங்களே, கரவெட்டி பிரதேச சுகாதார வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய நெல்லியடி சுகாதார பரிசோதகரால் (12/10) நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை பூராகவும் உள்ள தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.