Home செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 4844 ஆக உயர்ந்தது!

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 4844 ஆக உயர்ந்தது!

81
0

இலங்கையில் (12/10) நேற்றைய தினம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 92 நபர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும், ஏனைய 52 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மட்டும் 1397 ஆக அதிகரித்துள்ளது.