Home தாயக செய்திகள் மீண்டும் தனிமைப்படுத்தல் முகாமா மாறும் கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரி:

மீண்டும் தனிமைப்படுத்தல் முகாமா மாறும் கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரி:

45
0

கோப்பாய் இராசபாதையில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவுள்ளமை காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் திங்கட்கிழமை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்தில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இன்று காலை சுமார் எட்டு பேருந்துகளில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.