
அமைதிப் படை எனும் போர்வையில் வந்த இந்திய இராணுவத்தினரால் கொக்குவில் பிரம்படி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் 34ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதுவே இந்திய இராணுவத்தினர் இலங்கையில் மேற்கொண்ட முதலாவது படுகொலை நிகழ்வாகும்.
இன்று காலை குறித்த நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஜெயகரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.