Home செய்திகள் கேகாலை வைத்தியசாலையில் 3 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று!

கேகாலை வைத்தியசாலையில் 3 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று!

52
0

கேகாலை வைத்தியசாலையில் பணியாற்றும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாவனல்லயை சேர்ந்த இரண்டு மருத்துவர்களும் கேகாலையை சேர்ந்த மருத்துவர் ஒருவருமே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எலுவப்பிட்டிய அத்தனகலயை சேர்ந்த பௌத்தமதகுருமாரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதனை இராணுவத் தளபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24,878 பேருக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதனடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 5000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சவேண்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.