
வடமாகாணத்தில் இன்றையதினம் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அதனை குழப்பும் விதமாக அச்சுறுத்தல் பாணியில் பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வவுனியா நகரின் அனைத்து பகுதிகளிற்கும் வாகனங்களில் செல்லும் பொலிசார் “கடை உரிமையாளர்களுக்கு வவுனியா பொலிஸாரின் வேண்டுகோள். கடைகளை திறக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்”
என ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.