
யாழ்ப்பாணம் – தொண்டமனாற்றில், கிணற்றடிக்கு முகம் கழுவச் சென்ற நிலையில், மயங்கிச் வீழ்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (27/09) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கிச் வீழ்ந்த நிலையில் காணப்பட்ட அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சடலம் மந்திகை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.