Home உலக செய்திகள் பாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:

பாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:

27
0

தாமரைப்பாக்கத்தில் உள்ள SPB இன் பண்ணை வீட்டில் பாடல்களின் நாயகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் புகழுடல் 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவை அடுத்து, பாடகர்கள், நடிகர்கள், இசைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணாக்கானோர் நேற்று முதல் இன்று காலை வரை தமது அஞ்சலிகளஇ நேறில் சென்று செலுத்தியிருந்தனர்.

தாமரைபாக்கத்தில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்ததால், சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

16 மொழிகளில் நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஓர் உன்னத பாடகனாக, பாடல்களின் நாயகனாக, நடிகனாக, இசையமைப்பாளனாக, நடுவராக, பயிற்சியாளராக, என பன்முகஆளுமையுடன் வாழ்ந்து இன்று கோடிக்கணக்கான உலக மக்களின் கண்ணீரில் குழித்து இறுதி விடைபெற்றிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசமரியாதை வழங்கப்பட்டு 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டமை அவரின் வாழ்வின் சிறப்பை மேலும் சிறப்பாக்கி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.