Home செய்திகள் அனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலை மாணவர்கள்:

அனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலை மாணவர்கள்:

50
0

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அதை கண்டித்தும், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் எனக் கோரியும் இடம்பெற்று வருகிறது.

குறித்த போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையிலிருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்த போது மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா அவர்கள் பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் பின்னர் பொலஸாரின் அனுமதியுடன் போராட்டம் இடம்பெற்று வருகிறது.