Home செய்திகள் ஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:

ஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:

49
0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒட்டுசுட்டானிலும் இன்று (26/09) காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் மத்தியில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.