
உலகப் புகழ் பெற்ற பாடகரும், தென்னிந்திய பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB) சற்று முன் காலமானர் எனும் துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயினால் பீடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்த அவர் இன்று மீண்டும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்திய நேரம் மதியம் 1:04 மணிக்கு (வயது 74) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.