Home செய்திகள் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு மேலும் இரு வாரங்கள் தடையை நீடித்தது யாழ் நீதிமன்று!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு மேலும் இரு வாரங்கள் தடையை நீடித்தது யாழ் நீதிமன்று!

84
0

தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்து நிகழ்வுகள் நடாத்தவும், அஞ்சலிக்கவும் அண்மையில் விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் இரு வாரங்களுக்கு நீடித்து தீர்ப்பு வழங்கியுள்ளது யாழ் உயர் நீதிமன்றம்.

குற்றவியல் சட்டக் கோவை 106ம் சரத்துக்கு அமைய கடந்த 14ம் திகதி காவல்துறையினரால் கோரப்பட்டிருன்த திலீபன் நினைவேந்தலுக்கான தடையை யாழ் நீதிமன்றம் ஏற்று தடையை விதித்திருந்தது.

இந்த நிலையில் தமிழர் தரப்பில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் யாழ் நீதிமன்றில் குறித்த தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பின் போதே யாழ் நீதிமன்றம் மேலும் தடையை 14 நாட்களுக்கு நீடித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவ்ஆத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கான அஞ்சலிக்கோ, நிகழ்வுகளுக்கோ அனுமதி வழங்க நீதிமன்றால் முடியாது என சுட்டிக் காட்டிய நீதிமதி தடையை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதாகவும், குறித்த வழக்கு மீளவும் அழைக்கப்பட மாட்டாது எனவும் தீர்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.