Home செய்திகள் செட்டிகுளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

செட்டிகுளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

65
0

வவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று (24/09) மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த சு.நாகேந்திரன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு வீட்டில் தூங்கச்சென்றுள்ளார். காலையிலேயே மனைவி, கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார். 

அதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு சடலம் மீட்கப்பட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.