Home தாயக செய்திகள் சண்டித்தனங்களை விட்டு மத குருமாரை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்: சாணக்கியன்

சண்டித்தனங்களை விட்டு மத குருமாரை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்: சாணக்கியன்

5
0

பொலிஸாரை, கிராம சேவகரை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு சண்டித்தன பாங்கில் அச்சுறுத்தியமை ஏற்கமுடியாதவை. மத குருமாரை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(22) நாடாளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக திருப்தியடைய முடியாது.

அவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளார். அவர் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸாரை, கிராம சேவகரை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு அச்சுறுதல் விடுத்துள்ளார்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக இதுவரையில் சரியான முறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் இணைந்து புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.