Home செய்திகள் ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒப்பம்:

ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒப்பம்:

55
0

தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் நேற்றைய (18/09) தினம் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட விடையங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் இல்லத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்று காலை கையெழுத்திட்டு வருகிறார்கள்.

நேற்றைய தினம் குறித்த நடவடிக்கைக்கு முதன் முதலாக தனதும், தனது கட்சி ஆதரவையும் வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தனது இணைத் தலைமை பதவியையும் துறந்திருந்ததோடு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணையவும், ஆதரவு வழங்கவும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்றைய கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாத போதும், இன்றைய தினம் அக் கடிதத்தில் தாமும் கையெழுத்திட தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.