Home தாயக செய்திகள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விக்கி!

பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விக்கி!

13
0

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், தமிழ் மக்களின் தற்போதைய நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் “தமிழ் மக்கள் பேரவை” இன் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையை பலம பொருந்திய வெகுஜன அமைப்பாக மாற்றும் நோக்குடனேயே முன்மாதிரியாக தாமாக முன்வந்து குறித்த பதவியில் இருந்து விலகியுளார்.

இதன் மூலம் பலதரப்பட்ட கட்சிகளை சார்ந்த தமிழ்த் தேசிய வாதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட அமைப்பாக “தமிழ் மக்கள் பேரவை” உருவாக்கும் நோக்குடனேயே விக்னேஸ்வரன் குறித்த முடிவை எடுத்திருப்பதாக அறியவந்துள்ளது.

விக்னேஸ்வரனை போல் கடந்த தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியுடன் தம்மை அடையாளப்படுத்திய முன்னாள் “தமிழ் மக்கள் பேரவையின்” முன்னாள் உறுப்பினர்களும் விக்னேஸ்வரனை போல் பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.