Home செய்திகள் பத்திரிகை விநியோகஸ்தர் மீது வாள்வெட்டு!

பத்திரிகை விநியோகஸ்தர் மீது வாள்வெட்டு!

141
0

யாழ்ப்பாணம், கந்தரோடை பகுதிதியில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று அதிகாலை 4.30 மணியளவில் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பத்திரிகை விநியோகஸ்தராக ஈடுபட்டு வருகின்ற பாலச்சந்திரன் மதனகரன் (வயது-43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருதமரத்தை அண்மித்த பகுதியில் காணப்படும் பாலத்தடியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, குறித்த பத்திரிகை விநியோகஸ்தரின் உந்துருளியையும் (மோட்டார் சைக்கிள்) வாள் வெட்டுத்த்தாக்குதலை நடாத்தியவர்கள் எடுத்து சென்றுள்ளனர். இருப்பினும் வாள்வெட்டுக்கான சரியான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.