Home செய்திகள் யாழ் மாவட்ட சந்தை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

யாழ் மாவட்ட சந்தை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

30
0

விவசாய அமைச்சர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ் மாவட்டத்தில் சந்தைகளில் அறவிடப்படும் 10 % கழிவு முதலாம் திகதிக்கு பின்னர் அறவிடப்படமாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறிப்பிட்டார்.

யாழ் மாவட்ட விவசாய அமைப்புக்களினால் சந்தைகளில் 10% கழிவு அறவிடப்படும் நடைமுறையை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே, இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நடைமுறை இல்லை என்ற விடயத்தினை குறிப்பிட்ட விவசாய அமைச்சர், வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.