Home தாயக செய்திகள் முடிவுக்கு வந்த நீண்டகால பிரச்சனை – வழக்கு வாபஸ்!

முடிவுக்கு வந்த நீண்டகால பிரச்சனை – வழக்கு வாபஸ்!

119
0

முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், நீதியரசரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோருக்கிடையிலான பனிப்போர் வழக்கை வாபஸ் பெற்று முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் வினவிய போது;

இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது தரப்பாருக்கிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடையம் தாமதித்து வந்துள்ளது.

அண்மையில் நான் கதிர்காமத்தி இருந்த போது டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை தொடர்பு கொண்டார். அப்போது நான் அவருடன் உரையாடிய போது தான் ஒரு விடையத்தை அறிந்து கொண்டேன். அதாவது தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து தன்னை நான் வெளியேற்றியதாக அவர் இதுவரை காலமும் நினைத்துக்கொண்டிருந்துள்ளார். இந்த பிழையான புரிதலே இவ்வளவு காலமும் இவ் வழக்கு நீடிக்க காரணமாயிற்று. 

அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார். குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருந்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தால் தான் நான் அவரை (டெனீஸ்வரனை) பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடையத்தை அவருக்கு தெரியப்படுத்திய போது அவர் முழுமையாக விளங்கிக் கொண்டதோடு அந்த விடையம் தொடர்பில் ஒரு தெளிவையும் பெற்றிருந்தார். 

அதன் பின் பல சம்பவங்கள் நடைபெற்று இன்று அவர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். இப்போது எல்லாம் சுமூகமாக முடிவிற்கு வந்துள்ளது. அதற்கு ஈடாக நாங்களும் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்துள்ளோம். அதனடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தம்ஐ சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்துள்ளது. என்றார்.