Home செய்திகள் அரியாலை கடலில் – மீனவர்களுக்கு இடையூறாக காணப்பட்ட பனைக்குற்றிகள் அகற்றப்பட்டது:

அரியாலை கடலில் – மீனவர்களுக்கு இடையூறாக காணப்பட்ட பனைக்குற்றிகள் அகற்றப்பட்டது:

11
0

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் அரியாலை தொடக்கம் கோவிலாக்கண்டி வரையான கடற்பரப்பில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நேற்று புதன்கிழமை அகற்றப்பட்டது.

மீனவர்களின் தொழில் நடவடிக்கைளுக்கு இடையூறாக காணப்பட்ட குறித்த பனைக்குற்றிகள் தொடர்பில் ஆய்வுப்பணிகளுக்காக அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரிகளின் ஆலோசைனைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இராணுவத்தினரால் குறித்த பனைக் குற்றிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.