Home செய்திகள் மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறைக்கு செல்லவும் தயார்!

மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறைக்கு செல்லவும் தயார்!

6
0

முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னிடம் மன்னிப்பு கோருமாறும், வழக்குக்காக செலவுசெய்த பணத்தொகையை செலுத்துமாறும் டெனிஸ்வரன் தரப்பு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள விக்னேஸ்வரன் தரப்பு மறுத்துள்ளது.

வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்வதற்கு விரும்புவதாக டெனிஸ்வரன் முகநூல் மற்றும் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் டெனீஸ்வரனுடன் கதைப்பதற்கு விக்னேஸ்வரனின் வழக்கறிஞர் கனக ஈஸ்வரன் டெனீஸ்வரனின் வழக்கறிஞர் சுரேன் பெர்னாண்டோவிடம் கேட்டபோதே அதற்கு அவர் இணங்கவில்லை என்றும், மாறாக மூன்று நிபந்தனைகளை வைத்த போதே அதை உடனடியாகவே விக்னேஸ்வரன் தரப்பு வழக்கறிஞர் கனக ஈஸ்வரன் மறுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த வழக்கில் மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அது கொள்கை சார்ந்த விடயம் என்றும் அதனால் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருப்பதாகவும் அறிய முடிகிறது.