Home உலக செய்திகள் பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு!

10
0

பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதோடு நாள் தோறும் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்றைய (15-09-2020) தினம் மட்டும் 3,105 புதிய நோயாளர் பதிவாகியுள்ளதோடு 27 பேர் குறித்த நோயினால் இறந்துள்ளனர்.

கடந்த வாரம் முதல் மெல்ல மெல்ல அதிகரிக்கக் தொடங்கிய குறித்த நோய் பரவல் காரணமாக நேற்று முந்தினம் (14-09-2020) முதல் 6 பேருக்கு மேல் ஓரிடத்தில் (வீடுகள் உட்பட) கூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா நோய் தாக்கம் பலமடங்காக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் பிரித்தானியாவின் பல நகரங்கள் முற்றாக முடக்கும் நிலை (Lockdown) ஏற்படும் எனவும் அது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.