Home சினிமா தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்:

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்:

197
0

சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(10/09) காலமானார்.

சினிமா பிரபலங்கள், விஜய் டி.வி பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி பாலாஜின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் குறிப்பிட்டளவு பணத்தொகையை அவரது குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.

இதேவேளை, நடிகர் சிவகார்த்திகேயன் பாலாஜின் பிள்ளைகளின் கல்லூரி வரையான முழுப் படிப்புச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.