Home இலங்கை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட “காதல் ஜோடியின்” சடலங்கள்!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட “காதல் ஜோடியின்” சடலங்கள்!

20
0

கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் 28-வயதுடைய சுசிதரன் மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த 27-வயதுடைய தனுஷியா ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இருவரும் காதலித்து வந்ததாகவும், குறித்த பெண்ணிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் மேலும் தெரியவந்துள்ளது.