Home செய்திகள் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகும் மிலிந்த மொரகொட!

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகும் மிலிந்த மொரகொட!

7
0

6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல்,

ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வா

ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகர

அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்க

பிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகம

சீனாவிற்கான இலங்கை தூதவராக கலாநிதி பாலித கொஹொனா

ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் தகமை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் அதனை செப்டம்பர் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.