Home செய்திகள் அத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர்:

அத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர்:

22
0

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவர் என இலங்கை கடற்தொழில் அமைச்சர் காஞ்ச விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படைத் தளபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள், குறிப்பாக மன்னார் கடற்பரப்பிற்குள் அதிகளவில் அத்துமீறி உள் நுளையும் இந்திய றோளர்கள் மீன் வளங்களை அளித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அத்தோடு கொரோனா அச்ச நிலை அதிகரித்து காணப்படும் நிலையில் மிக மோசமான கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உலக நாடுகள் வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள இந்தியாவில் இருந்து வரும் இவ்வாறான அத்துமீறல்கள், சட்டத்திற்கு புறம்பான வரவுகளை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.