Home செய்திகள் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு வீதிகள்:

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு வீதிகள்:

28
0

இலங்கையின் பல பிரதேசங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மருதானை , ஆமர்வீதி , பேஸ்லைன் வீதி , புறக்கோட்டை ஆகிய பிரதேச வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இங்கு 121 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு கடும் மழைக்கான “சிவப்பு” எச்சரிக்கையை இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.