
யாழ் கைதடி நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விசாரைக்கு சொந்தமான காணியில் பௌத்தமத அடையாளத்தை நிறுவும் நோக்கில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இன்று (09/09) புதன்கிழமை காலை குறித்த விகாரை அமைந்துள்ள காணி பகுதியில் பௌத்த மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கான புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பௌத்த பிக்கு தலைமையில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
