Home செய்திகள் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (9):

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (9):

8
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை 11:00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற குழுவின் அமைப்பாளர் உள்ளிட்ட சில பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

அத்துடன் தேசியப் பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி தன்னிச்சையான தீர்மானம் மேற்கொண்டதாக பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் என்பன அதிருப்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.