Home உலக செய்திகள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு!

அதிகரிக்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு!

57
0

பிரித்தானியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா நோய் பரவல் ஆயிரக்கணக்கில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14-09-2020 திங்கட் கிழமை முதல் இப் புதிய சட்டம் அமுலுக்கு வருவதாகவும், மீறுவோர் நூறு பவுண்டுகள் (£100) முதல் மூவாயிரத்து இருநூறு பவுண்டுகள் வரை தண்டப்பணம் செலுத்த நேரிடும் எனவும் (£3200) அறிவித்துள்ளது.

அச்சட்டத்தில் – எதிர் வரும் (14/09) திங்கட் கிழமை முதல் 6 பேருக்கு மேள் ஓர் இடத்தில் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே தமது நிகழ்வுகளுக்காக (செப்ரெம்பர்) முன் பதிவு செய்த திருமண நிகழ்வுகள், மரணச் சடங்கின் இறூதி நிகழ்வுகள், மற்றும் கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடாகியிருந்த விளையாட்டு நிகழ்வுகள் தவிர்கப்பட்டு அவை இம் மாதம் மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதி முதல் பிரித்தானியாவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை தொடர்ந்தும் இயங்குமா இல்லையா என்பது தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பு வராத நிலையில் வழமை போல் பாடசாலைகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.