
இலங்கைத் தீவை விட்டு வெளியேறி புலம்பெயர்ன்து பல நாடுகளில் வாழும் மக்களுக்கு புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
அண்மையில் இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள ஆட்சியாளர்கள் புதிய அரசியல் அமைப்பு (20வது அரசியல் சட்டம்) தொடர்பில் முனைப்பு காட்டிவரும் இவ் வேளையில் அதனூடாக இலங்கை வாழ் தமிழர்களுக்கும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் பல சிக்க்லகள் ஏற்படப்போவது தெரியவந்துள்ளது.
புதிய சட்ட வரைபினூடாக ராஜபக்ஷ களின் குடும்ப நலனுக்கும், பெளத்தத்திற்கும், சிங்கள மொழிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மொத்தத்தில் பெளத்த பேரினவாத அரசியல் சட்டமாக உருவெடுக்கவுள்ள புதிய (20வது) அரசியல் சட்ட வரைபின் ஊடாக இலங்கை வாழ் தமிழர்களின் அபிலாஷைகளும், அங்கீகாரங்களும் இல்லாமல் செய்யப்பட்டு சொத்துக்களும், வளங்களும் அபகரிப்பதற்கான முக்கிய திட்டங்கள் உள்ளடக்கப் பட்டிருப்பதாக அறியவந்துள்ளது.
குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்களில் ஐம்பது வீதமான (50%) தமிழர்கள் புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் நிலங்களையும், வளங்களையும் அரசுடமையாக்கும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இவ்வாறு சட்டவரைபில் உள்ளடக்கப்பட்டு அச் சட்டம் அமுலுக்கு வந்தால் வரும் ஜனவ்வரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டவரின் நிலங்களும், வளங்களும் இழக்கும் நிலை ஏற்படும். அது மட்டுமன்றி அந்த நிலங்களில் இராணுவ முகாம்கள் மீள அமைக்கப்படவும், சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே, தமிழர்கள் விழித் தெழுந்து விரைந்து தமது நிலங்களையும், வளங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டிய தேவை எழுந்துள்ளது.
காணிகளை துப்பரவு செய்து, அடைத்து பராமரிக்க வேண்டியதோடு உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்லது வறிய குடும்பங்களை இருக்க, அல்லது பராமரிக்க விட்டேனும் தமது சொத்துக்களை பாதுகாக்கும் அதே வேளை, தமிழர் தாயகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வோற் தமிழனுக்கும் எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.