Home உலக செய்திகள் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு தொற்று!

19
0

இந்தியாவில் எப்போதும் இல்லாதவாறு நேற்றைய தினம் (06-09-2020) மட்டும் 91,723 பேருக்கு கொரோனா நோத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனாவின் தாக்கம் நேற்றைய தினம் (06-09-2020) இதுவரை இல்லாத அளவிற்கு வியக்க வைக்கும் வண்ணம் உயர்வடைந்துள்ளமை அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் 1008 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்தும் உள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 4.2 மில்லியன் மக்கள் கொரோனா நோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, 71,711 பேற் இதுவரை கொரோனா நோயினால் பலியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது